சினிமா
கணவரின் வளர்ச்சியை பாராட்டி உருக்கமான பதிவினை வெளியிட்ட ஷாலினி.!! வெளியான பதிவு இதோ.!

கணவரின் வளர்ச்சியை பாராட்டி உருக்கமான பதிவினை வெளியிட்ட ஷாலினி.!! வெளியான பதிவு இதோ.!
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனிப்பட்ட முத்திரையை பதித்த நடிகர் அஜித் குமார், திரைப்பட உலகில் தனது 33 ஆண்டுகால பயணத்தை கடந்த சில நாட்களில் நிறைவு செய்துள்ளார். அவரின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரபலங்களும் அவருக்காக வாழ்த்து கூறி வருகின்றனர்.அஜித் குமார் கடந்த தினம் ஒரு அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டு, அதில் தனது ரசிகர்கள், குடும்பத்தினர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்திருந்தார். மிகவும் எளிமையாகவும், உணர்வுபூர்வமாகவும் அமைந்த அந்த அறிக்கை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.அந்த அறிவிப்பிற்குப் பிறகு, இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள விடயமாக, அவரது மனைவியும், முன்னணி நடிகையுமான ஷாலினியின் பதிவு விளங்குகின்றது. அஜித்தின் 33 ஆண்டு திரை பயணத்தை கொண்டாடும் வகையில், ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருந்த வார்த்தைகள் ரசிகர்களின் மனங்களை உருகச் செய்துள்ளன.”You haven’t just built a career. you’ve carried people, changed lives, and done it all with grace. I’m so proud of you! Happy 33 years!”அவரது இந்த பதிவு, ஒரு வாழ்நாள் துணைவியாக ஒரு மனிதனின் பயணத்திற்கு அளிக்கும் ஆதரவின் பிரதிபலிப்பாக உள்ளதாகவே நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.