இலங்கை
காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு எதிராக கடை அடைப்பு போராட்டம்

காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு எதிராக கடை அடைப்பு போராட்டம்
காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் இன்று கடை அடைப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், மன்னார் நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது.
அத்துடன், மன்னாரிலுள்ள கடற்றொழிலாளர்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்லாது, கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த அமைதிவழிப் கவனயீர்ப்பு போராட்டத்தில், பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமதத் தலைவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை கோபுரங்களை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.