Connect with us

இலங்கை

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தன்னுயிர் மாய்ப்பு!

Published

on

Loading

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தன்னுயிர் மாய்ப்பு!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர் 24 வயதான ஆசிரி ஷானக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

 பிரேத பரிசோதனையில் சாட்சியமளித்த இறந்த மாணவரின் வைத்தியரான தந்தை,
மகன் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லாமையினால் அது குறித்து வினவிய போது, வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement

 எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது. என் மகனும் மகளும் அந்த நாயை மிகவும் நேசித்தார்கள். அந்த நாய் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டது. நாய் இறந்த பிறகு, என் மகன் மிகவும் சோகமாக இருந்தார். பின்னர், கண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் மகனை அழைத்து செல்ல முன்பதிவு செய்திருந்தேன்.

 கடந்த 2 ஆம் திகதி, என் மனைவி, மகன் மற்றும் மகள் என நாங்கள் நான்கு பேரும் வீட்டில் இருந்தோம். காலையில், என் மகன் என்னுடன் சாப்பிட்டார். என் மகனிடம் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. அவர் நன்றாக இருந்தார்.
பின்னர் நான் சுமார் 8.30 மணிக்கு கேகாலை பொது மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றேன். மனைவி, மகன் மற்றும் மகள் வீட்டில் இருந்தனர். என் மகன் வீட்டின் மேல் மாடியில் ஒரு அறையில் இருந்தார்.

 காலை 9.45 மணியளவில், என் மனைவி என்னை தொலைபேசியில் அழைத்து, சீக்கிரம் வீட்டிற்கு வரச் சொன்னார். நான் சீக்கிரம் வீட்டிற்குச் சென்று பார்த்த போது மகன் உயிரிழந்து கிடந்தார்” என தந்தை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

 உயிரிழந்த மாணவனின் தந்தை மற்றும் தாயார் தொழில் ரீதியாக மருத்துவர்கள், அவரது ஒரே சகோதரியும் மருத்துவ மாணவியாகும். உயிரிழந்த மாணவன் ஆசிரி ஷானகவின் இறுதிச் சடங்குகள் நேற்று (04) கேகாலை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளன.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754383182.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன