இலங்கை
செம்மணிப் புதைகுழியில் மேலும் 5 என்புத்தொகுதிகள்!

செம்மணிப் புதைகுழியில் மேலும் 5 என்புத்தொகுதிகள்!
அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின்போது, மேலும் ஐந்து என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வின் 30ஆம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே மேலும் ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் 6 என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது.