இலங்கை
செம்மணியில் நேற்று ஜி.பி.ஆர். ஸ்கானிங்; இன்றும் பணிகள் தொடரும்!

செம்மணியில் நேற்று ஜி.பி.ஆர். ஸ்கானிங்; இன்றும் பணிகள் தொடரும்!
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் ஸ்கான் செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலதிகமாக இருக்கின்றனவா என்று அறிவதற்காக தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் (ஜி.பி.ஆர்.) ஸ்கான் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கான இயந்திரமும், தொழில்நுட்ப உதவிகளும் கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட நிலையில், அந்தப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இன்றும் இந்தப் பணிகள் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.