இலங்கை
சேவையிலிருந்து சட்டவிரோதமாக விலகிய ஆயுதப்படை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை

சேவையிலிருந்து சட்டவிரோதமாக விலகிய ஆயுதப்படை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை
சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சேவையிலிருந்து தப்பியோடிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி 2,937 இராணுவ வீரர்கள், 289 கடற்படை வீரர்கள், 278 விமானப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத வீரர்கள் இராணுவத்தில் சரணடைவதற்காக கடந்த ஆண்டு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்தக் காலகட்டத்தில் சரணடையாதவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.