Connect with us

இலங்கை

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published

on

Loading

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என நாடா ளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

   தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதை குழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள்வரை புதைக்கப்பட்டுள்ளதான வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது

அவரின் மனைவி செம்ணியில் சுமார் 300 பேரை தலையாட்டி மூலம் கொண்டுவரப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது கணவர் கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம் எழுதியதாக ஊடகங்களில் பார்த்தேன்.

Advertisement

எம்மை பொறுத்தவரையில் சோம ரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளி குற்றவாளி சில விடயங்களை கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார்.

ஆகவே அவர் என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் .

அவர் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன