இந்தியா
டெல்லியில் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுமி

டெல்லியில் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுமி
டெல்லியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது காதலனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சும்புல் என்ற அந்த பெண் தனது நண்பருடன் சிற்றுண்டி வாங்க சென்ற போது தாக்குதல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சும்புலின் காதலன் என்று கூறப்படும் ஆர்யன், தனது நண்பர்களில் ஒருவருடன் அங்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இளம்பெண்ணை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை