இலங்கை
தமிழ்த் தரப்பை திருப்திப்படுத்த மஹிந்தவுக்கு அரசு நெருக்கடி; திலும் அமுனுகம குற்றச்சாட்டு!

தமிழ்த் தரப்பை திருப்திப்படுத்த மஹிந்தவுக்கு அரசு நெருக்கடி; திலும் அமுனுகம குற்றச்சாட்டு!
பிரிவினைவாதக் கொள்கையுடைய புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் திருப்திப்படுத்தவே மஹிந்த ராஜபக்சவை நெருக்கடிக்குள்ளாக அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திலும் அமுனுகம குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் சர்வஜன சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
மஹிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றினால் பெருமளவிலான மக்கள் உறுதிப்பத்திரத்துடன் அவருக்கு வீடுகளை வழங்குவார்கள். பழிவாங்கும் நோக்கில் சிறு பிள்ளைத்தனமாகச் செயற்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும். போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவை நெருக்கடிக்குள்ளாக இந்த அரசாங்கம் பல வழிகளில் முயற்சிக்கின்றது. முன்னாள் ஜனாதிப திகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பல்ல. அது கடமை – என்றார்.