இலங்கை
தலவாக்கலையில் ATM அட்டையை கொள்ளையிட முயன்ற இளைஞன் கைது

தலவாக்கலையில் ATM அட்டையை கொள்ளையிட முயன்ற இளைஞன் கைது
தலவாக்கலை நகரில் உள்ள வங்கி ATM இயந்திரத்தில், பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையை கொள்ளையிட முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மருத்துவ செலவுக்காக பணம் எடுக்க வந்த அந்தப் பெண், அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் தனது இரகசிய எண்ணைக் கூறி, பணத்தை எடுத்துத் தருமாறு கேட்டுள்ளார்.
அந்த இளைஞன் இரகசிய எண்ணைத் தெரிந்து கொண்ட பின்னர், பெண்ணின் ATM அட்டையுடன் தப்பி ஓட முயன்றுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை தலவாக்கலை நகரில் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை