இலங்கை
திடீரென பாகனை மிதித்து தள்ளிய யானை ; தலைதெறிக்க ஓடிய மக்கள்!

திடீரென பாகனை மிதித்து தள்ளிய யானை ; தலைதெறிக்க ஓடிய மக்கள்!
பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொண்ட யானை ஒன்று திடீரென பாகனை மிதித்துத் தள்ளி அட்டகாசம் புரிந்துள்ளது.
இந்தச் சம்பவம் மாத்தறை தேவிநுவர பெலி பெரஹெராவில் நேற்று (04) மாலை இடம்பெற்றது.
தேவிநுவராவில் உள்ள உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு தேவாலாவின் மூன்றாவது ஊர்வலம் நேற்று (04) மாலை கோலாகலமாக இடம்பெற்றது.
குறித்த ஊர்வலத்தில் “பானுகா” என்ற யானை திடீரென பாகனை மிதித்து தள்ளி சரிந்து விழுந்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யானை திடீரென பாகனை மிதித்து தள்ளியதுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களையும் தாக்க முயற்சித்துள்ளது.
இதனால் அங்கிருந்த சிறியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் அலறி அடித்து அங்குமிங்குமாக ஓடிச் சென்றனர்.
குறிப்பிட்ட சில நிமிடங்களாக யானையைக் கட்டுப்படுத்த முடியாமல் யானைப் பாகன்கள் திணறினர்.
பின்னர் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் யானையைக் கட்டுப்படுத்தி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
குறித்த காட்டு யானை தாக்கியதில் யானைப் பாகன் ஒருவர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து யானைகளையும் அகற்றி ஊர்வலத்தை நடத்த ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதன்பின்னர் பெரஹரா ஊர்வலம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.