இலங்கை
தென்னக்கோனை பதவி நீக்க 177 பேர் ஆதரவு

தென்னக்கோனை பதவி நீக்க 177 பேர் ஆதரவு
இலங்கை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க நாடாளும்ன்றில் 177 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் 177 மேலதிக வாக்குகளை நாடாளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (05) நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணை எதிர்த்து எவரும் வாக்களிக்கவில்லை. அத்துடன், வாக்களிப்பில் இருந்து ஒரு உறுப்பினர் மட்டுமே விலகியிருந்ததகவும் கூறப்படுகின்றது.