Connect with us

இலங்கை

தேசபந்துவின் தலைவிதி இன்று நிர்ணயம்

Published

on

Loading

தேசபந்துவின் தலைவிதி இன்று நிர்ணயம்

 இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (5) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குக் கூடுகின்றது.

Advertisement

நாடாளும்ன்றில் ஆரம்ப கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மேற்படி தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்படும்.

அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கவுள்ளது.

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிராக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பனவும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன என்று தெரியவருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன