இலங்கை
தேசப்பந்து தென்னகோனை பதவி நீக்குவது குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்!

தேசப்பந்து தென்னகோனை பதவி நீக்குவது குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படும்!
தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது, மேலும் அனைத்து ஆளும் கட்சி எம்.பி.க்களும் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர், அதாவது 113 எம்.பி.க்கள் வாக்களிப்பதன் மூலம் நிறைவேற்ற முடியும்.
பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, ஐஜிபி பதவிக்கான பெயரை அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி பரிந்துரைக்க உள்ளார்.