இந்தியா
நடிகை மீராமிதுனைக் கைது செய்து உத்தரவு!

நடிகை மீராமிதுனைக் கைது செய்து உத்தரவு!
நடிகை மீராமிதுனைக் கைது செய்து எதிர்வரும் 11ஆம் திகதி முன்னிலைப்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை மீராமிதுன் மற்றும் அவரது நண்பரான சாம் அபிஷேக் ஆகியோர் பட்டியலினத்தவர்கள் மீது அவதூறு கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து பட்டியலின மக்களை அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் காணொளி வெளியிட்ட வழக்கில், நடிகை மீரா மிதுனை கைது செய்து எதிர்வரும் 11ஆம் திகதி முன்னிலைப்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.