இந்தியா
நடுரோட்டில் பற்றி எரிந்த சொகுசு கார்!

நடுரோட்டில் பற்றி எரிந்த சொகுசு கார்!
பெங்களூரை சேர்ந்தவர் சஞ்சீவ். ஆடம்பர கார்கள், சொகுசு கார்கள், பழமையான கார்கள் ஆகியவற்றை குவித்து வைத்துள்ளார். அது தொடர்பான படங்களை வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். கார் பிரியர்களால் ரசிக்கப்படும் இவரின் பதிவுகளால் சமூக வலைத்தளத்தில் 2 லட்சம் பின்தொடர்பாளர்களுடன் பிரபலமாக உள்ளார்.
இந்த நிலையில் தன்னிடம் உள்ள ஆடம்பர சொகுசு காரை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஒட்டி சென்றார். ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த காரை சாலையில் வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் கண்கொட்டாமல் அந்த காரை பார்த்து ரசித்தனர்.அப்போது அந்த கார் எதிர்பாராமல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
என்ஜினில் இருந்து பற்றி எரிந்த தீ மளமளவென கார் முழுவதும் எரிந்தது. இதனால் சாலைவாசிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். சுதாகரித்து கொண்ட சஞ்சீவ் காரில் இருந்து உடனடியாக வெளியேறி தீயை அணைக்க முயன்றார். நடுரோட்டில் சொகுசு கார் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.[ஒ]