சினிமா
நாட்டின் கவனத்தை ஈர்த்த ‘பார்க்கிங்’…!3தேசிய விருது வெற்றியை கொண்டாடிய படக்குழு!

நாட்டின் கவனத்தை ஈர்த்த ‘பார்க்கிங்’…!3தேசிய விருது வெற்றியை கொண்டாடிய படக்குழு!
இந்த ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்த முக்கிய படமாக ‘பார்க்கிங்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் எம். எஸ். பாஸ்கர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம், சிறந்த தமிழ் திரைப்படம் என்ற உயரிய விருதை வென்றுள்ளது.இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். இவரது கதையமைப்பும், இயக்கத்திறமையும் தேசிய அளவில் பாராட்டப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளன. மேலும், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை நடிகர் எம். எஸ். பாஸ்கர் பெற்றுள்ளார். அவருடைய சிறப்பான நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த வெற்றிகளை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் இன்று ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்தனர். இதில், படம் உருவாக உதவிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்கள் மற்றும் ஊடகத்தினரும் கலந்து கொண்டனர். வெற்றியின் நினைவாக கேக் வெட்டியும், புகைப்படங்கள் எடுத்தும் படக்குழுவினர் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.