சினிமா
பராசக்தி படத்தில் வில்லனாக வரவேண்டியது லோகேஷ்..! ஆனா வாய்ப்பை ஏன் தவிர்த்தார் தெரியுமா.?

பராசக்தி படத்தில் வில்லனாக வரவேண்டியது லோகேஷ்..! ஆனா வாய்ப்பை ஏன் தவிர்த்தார் தெரியுமா.?
இன்றைய தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படும் இயக்குநர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை வழங்கி, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கட்டியெழுப்பியுள்ளார்.இப்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படம் வெளியாக இருக்கையில், தற்பொழுது லோகேஷைச் சுற்றியிருக்கும் சினிமா ரகசியம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.‘லியோ’ படம் வெளியாகிய பிறகு, சமூக வலைத்தளங்களில், இனிமேல் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகவும் களமிறங்கப் போகிறார் என்ற கிசுகிசு பரவத் தொடங்கியது. இதற்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும், பல இண்டர்வ்யூ, பேட்டிகளில் அந்த வாய்ப்பு இருக்கலாம் என்று தான் சொல்கிறார்.அவ்வாறே, பிரபல இயக்குநர் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக லோகேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.சுதா கொங்கரா சொன்ன கதையை லோகேஷ் கேட்டவுடன், அது மிகவும் பிடித்துப்போயிருப்பதாகவும், கதையின் தன்மை, வில்லனின் மனநிலை, அதில் வரும் டுவிஸ்ட் எல்லாம் லோகேஷ் மனதை கவர்ந்திருந்தது எனவும் கூறினார்.மேலும், நடிகர் சிவகார்த்திகேயனும் தனிப்பட்ட முறையில், “நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிச்சா நிச்சயமாக வேற லெவலா இருக்கும்” என ஊக்கமளித்ததாகவும் தெரிவித்தார் லோகேஷ்.இவ்வளவு உற்சாகம் இருந்தும், ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் ‘கூலி’ படத்தில் முழு பிஸியாக இருந்ததால் இரண்டு படங்களிலும் மாறி மாறி வேலை செய்வது சரியாக இருக்காது என்ற காரணத்தால் பராசக்தி படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் லோகேஷ் கூறினார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.