இலங்கை
பாராளுமன்றத்தில் பரபரப்பு ; நாமல் – சபாநாயகர் இடையே கருத்து முரண்பாடு

பாராளுமன்றத்தில் பரபரப்பு ; நாமல் – சபாநாயகர் இடையே கருத்து முரண்பாடு
இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டார்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் யோசனை குறித்த விவாதத்தை நடத்துவதன் சட்டபூர்வமான தன்மை குறித்து கேள்வி எழுப்பியபோதே இக் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிலையியற் கட்டளை 98F இன் கீழ், நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
“இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 09 வழக்குகள் விவாதிக்கப்படுகின்றன.
நீதிமன்ற வழக்கின் முடிவு பாராளுமன்ற விவாதத்தால் பாதிக்கப்படாது என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு, பின்னர் விவாதத்தைத் தொடங்குங்கள்,” என்று நாமல் ராஜபக்ஷ கூறினார்.
பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, தொடர்புடைய விதிகளைப் படித்த பிறகு பாராளுமன்ற விவாதம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் இன்று பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.