இலங்கை
பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம் ; ஆடு மேய்க்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம் ; ஆடு மேய்க்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்
பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், நேற்று (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப் போகிறேன்” என தாயிடம் கூறிவிட்டு சென்ற சிறுவன், வெலிகந்த பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.