Connect with us

இந்தியா

மாணவர் தலைவர் டூ அரசியலில் உச்சம்: காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் மரணம்

Published

on

Satyapal Malik

Loading

மாணவர் தலைவர் டூ அரசியலில் உச்சம்: காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக், தனது 79-வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவை அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆர்.எம்.எல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, சத்யபால் மாலிக், சர்க்கரை நோய் சார்ந்த சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கமே 11 அன்று சிறுநீர்ப்பாதை தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செப்டிக் ஷாக், நிமோனியா மற்றும் பல உறுப்பு செயலிழப்புகள் ஏற்பட்டன. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.அரசியல் பயணம்:உத்தரப் பிரதேசத்தின் பாக்மத் பகுதியைச் சேர்ந்த சத்யபால் மாலிக், 1970-களில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மீரட் கல்லூரியின் மாணவர் அமைப்பின் தலைவராக மாலிக், தன்னுடைய அரசியல் பயணத்துக்கு பிள்ளையார் சூழி போட்டுத் தொடங்கினார். கால் நூற்றாண்டுக்கும் மேலான அவரது அரசியல் பயணத்தில், அவர் பல கட்சிகளில் பயணித்துள்ளார். 1980-ல் சரண் சிங் தலைமையிலான லோக் தளத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1986-ல் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினரானார். அரசியலில் வெளிப்படையாகப் பேசக்கூடியவராக அறியப்பட்ட மாலிக், தனது அரசியல் வாழ்க்கையில் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர், கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக அவர் இருந்த காலத்தில்தான், அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது. 2019 புல்வாமா தாக்குதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் பரவலாக விவாதிக்கப்பட்டன. அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, புதன்கிழமை லோதி மயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன