Connect with us

விளையாட்டு

மாநில அளவில் ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கடலூர் ஆயுதப்படை காவலர் – எஸ்.பி. பாராட்டு

Published

on

Mr Tamil Nadu cuddalore police

Loading

மாநில அளவில் ஆணழகன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கடலூர் ஆயுதப்படை காவலர் – எஸ்.பி. பாராட்டு

மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கடலூர் ஆயுதப்படை பிரிவு காவலர் 85 கிலோ எடை பிரிவில்  தங்கப்பதக்கம் பெற்றார்மாநில அளவிலான ஆணழகன் போட்டி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இதில், கடலூர் ஆயுதப்படை பிரிவு காவலர் 85 கிலோ எடை பிரிவில்  தங்கப்பதக்கம் வென்றார்.கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் அவர்கள் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், ஓட்டுமொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார், காவலர் விஷ்ணுபிரசாத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்  அப்பாண்டராஜ் அவர்கள் உடன் இருந்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் கடலூர்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன