இலங்கை
மைல் கல்லை தொட்டது பங்குச்சந்தை!

மைல் கல்லை தொட்டது பங்குச்சந்தை!
கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று வரலாற்றில் முதல்முறையாக 20 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் கூற்றுப்படி, நேற்றுக் காலை வர்த்தகத்துக்காக கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்பட்ட 10 நிமிடங்களுக்குள் இந்த மைல்கல் எட்டப்பட்டது. அந்த நேரத்தில், பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனை வருவாய் 432 மில்லியன் ரூபாவைத் தாண்டியது என்று கொழும்பு பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.