சினிமா
ரசிகர்களுக்காக ‘வடம்’ படக்குழுவினர் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்..! என்ன தெரியுமா.?

ரசிகர்களுக்காக ‘வடம்’ படக்குழுவினர் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்..! என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் சிறப்பான இடத்தை உருவாக்கியுள்ள நடிகர் விமல், தனது அடுத்த திரைப்படத்துக்கான பணிகளில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளார். பல்வேறு வெற்றிப் படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களுடன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், தற்போது ‘வடம்’ எனும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.இந்த புதிய திரைப்படத்தை இயக்குவது மகேந்திரன். இப்படத்தின் தலைப்பு மற்றும் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.சமீபத்திலேயே இப்படத்துக்கு ‘வடம்’ என தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று (05 ஆகஸ்ட் 2025) இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக துவங்கியுள்ளது. தொடக்க விழாவில் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போட்டோஸ் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.