இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி: அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரிகளை உயர்த்துவேன் – ட்ரம்ப் மிரட்டல்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி: அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரிகளை உயர்த்துவேன் – ட்ரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை”மிகப் பெரிய அளவில்” உயர்த்துவதாக செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தார். ட்ரம்ப்பின் இந்த கடுமையான நிலைப்பாடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.அமெரிக்காவின் சிஎன்பிசி (CNBC) தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில் அவர், “இந்தியாதான் மிக அதிக வரி விதிக்கும் தேசம். அவர்களுடன் நாம் மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் செய்கிறோம், ஏனெனில் அவர்களின் வரிகள் மிக அதிகம்.இந்தியா ஒரு நல்ல வர்த்தகப் பங்காளியாக இருந்ததில்லை. அவர்கள் எங்களுடன் நிறைய வர்த்தகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வர்த்தகம் செய்வதில்லை. எனவே நாங்கள் 25% (வரி) என்பதை ஒரு முடிவாக எடுத்தோம், ஆனால் அவர்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதால், அடுத்த 24 மணி நேரத்தில் அதை மிகக் கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.இந்தியாவின் உயரிய சுங்கவரிகள் இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு முக்கிய தடையாக இருந்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், அவர் புதிய வரி விகிதம் எவ்வளவு இருக்கும் என்பதைத் தெளிவாகக் கூறவில்லை.சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்றபோது, இரு நாடுகளும் தங்கள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதி அளித்தன. 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை $500 பில்லியனாக இரட்டிப்பாக்குவது என்ற லட்சிய இலக்கையும் நிர்ணயித்துள்ளன.2024-இல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான மொத்த வர்த்தகம் $129.2 பில்லியனை எட்டியது. இதில், அமெரிக்காவின் ஏற்றுமதி 3.4% அதிகரித்து $41.8 பில்லியனாக இருந்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி 4.5% அதிகரித்து $87.4 பில்லியனாக இருந்தது. இதனால் அமெரிக்காவிற்கு $45.7 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது.ஜூலை 31 அன்று, டிரம்ப், ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னதாக, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் குறிப்பிடப்படாத “அபராதம்” விதிப்பதாக அறிவித்திருந்தார்.ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவின் மலிவான கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் மீது கடும் அழுத்தத்தை செலுத்தி வருகின்றன.இதற்கிடையில், இந்த வாரம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய உள்ளதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் விரைவில் மாஸ்கோவுக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை ஆங்கிலத்தில் வாசிக்கவும்.