உலகம்
வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு

வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி, ஆட்சியை கவிழ்த்து ஒரு வருடம் நிறைவு அடைந்த நிலையில், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தொலைகாட்சியில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது “இடைக்கால அரசின் சார்பில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பிப்ரவரி மாதம் 17 அல்லது 18ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் பாதியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை