இலங்கை
வவுனியாவில் நகைகள் திருட்டு; சந்தேகநபர் கைது

வவுனியாவில் நகைகள் திருட்டு; சந்தேகநபர் கைது
25 பவுண் நகைகள் மீட்பு!
வவுனியா – சோயா வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற நகைத் திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – சோயா வீதி உள்ள வீடொன்றில் ஒருவாரத்துக்கு முன்னர் நகைகள் திருடப்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாகவே நேற்று சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப் பட்டார்.
வவுனியா – ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்றும், அவர் 33 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 25 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.