இலங்கை
23,000 மருத்துவர்களின் இடமாற்றலில் சிக்கல்!

23,000 மருத்துவர்களின் இடமாற்றலில் சிக்கல்!
23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட மருத்துவர்களின் வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன என்றும், அதனால் சுகாதார அமைப்பில் தேவையற்ற சிக்கல் உருவாக்கப்படுகின்றது என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இடமாற்ற நடைமுறைகள் ஸ்தாபனக் குறியீட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆயினும் சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரிவின் தன்னிச்சையான தன்மை காரணமாகவே இந்தச் சிக்கல்கள் தற்போது எழுந்துள்ளன. இந்தப் பிரச்சினையால் சுமார் 23 ஆயிரம் மருத்துவர்களின் இடமாற்றங்கள் தொடர்பாகச் சிக்கல்கள் எழுந்துள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களின் இடமாற்றங்கள் செயற்படுத்தப்படவில்லை – என்றார்.