Connect with us

தொழில்நுட்பம்

7,000mAh பேட்டரி, 50mp கேமிரா.. ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்குகிறது போக்கோ எம்7 பிளஸ்!

Published

on

Poco M7 Plus

Loading

7,000mAh பேட்டரி, 50mp கேமிரா.. ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்குகிறது போக்கோ எம்7 பிளஸ்!

இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த Poco நிறுவனம் தயாராகி வருகிறது. இதுகுறித்து அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் Flipkart தளத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பெயர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது Poco M7 Plus இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. Poco M6 Plus மாடலை விட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரியுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 சிப்செட்டில் இயங்கும். இதன் முதன்மை பின்பக்க கேமரா 50 மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கலாம். 6.9-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் (refresh rate) வர வாய்ப்புள்ளது. 91Mobiles Hindi அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 13 அன்று இந்தியாவில் ரூ.15,000-க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படலாம்.Poco இந்தியா மற்றும் Flipkart ஆகியவை இணைந்து பிரத்யேக மைக்ரோசைட்டை உருவாக்கி, புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை டீஸ் செய்து உள்ளன. டீசரில், கருப்பு நிறத்தில் உள்ள ஸ்மார்ட்போனின் பின்பக்கம் மற்றும் இரட்டை கேமரா அமைப்பு காட்டப்பட்டுள்ளது. “அனைவருக்கும் சக்தி” (Power for All) என்ற வாசகம், இந்த சாதனம் பெரிய பேட்டரியுடன் வரும் என்பதைக் குறிக்கிறது.Poco M7 Plus, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.13,499 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட Poco M6 Plus-ஐ விட பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Poco M6 Plus-இல் Snapdragon 4 Gen 2 AE சிப்செட், 6.79-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 5,030mAh பேட்டரி இருந்தன. கேமராவைப் பொறுத்தவரை, Poco M6 Plus-இல் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருந்தது. புதிய Poco M7 Plus ஸ்மார்ட்போன், Poco M6 Plus-ஐ விட பெரிய பேட்டரி மற்றும் மேம்பட்ட சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன