சினிமா
ஃபிட்னஸில் கலக்கும் கரீனா கபூர்.! இன்ஸ்டாவில் வெளியிட்ட ஸ்டைலிஷ் லுக்கை பார்த்தீங்களா?

ஃபிட்னஸில் கலக்கும் கரீனா கபூர்.! இன்ஸ்டாவில் வெளியிட்ட ஸ்டைலிஷ் லுக்கை பார்த்தீங்களா?
90களில் இருந்து தற்போது வரைக்கும் தன்னுடைய அழகு, நடிப்புத் திறன், ஸ்டைலிஷ் தோற்றம் போன்ற பல காரணங்களால் ரசிகர்களின் மனதில் சாதனையைப் படைத்துள்ளவர் தான் கரீனா கபூர் கான். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் ஆட்சி செய்த இவர், இன்று வரை தன்னுடைய புகழையும் கவர்ச்சியையும் இழக்காமல் ரசிகர்களிடையே இடம் பிடித்து வருகிறார்.கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே பெரிய எதிர்பார்ப்புடன் திரையுலகில் அறிமுகமான கரீனா, தன்னை ஒரு திறமையான நடிகையாக நிரூபித்துக் காட்டினார். அதிகபட்சமாக ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அத்தகைய நடிகை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜிம்மில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோஷூட் புகைப்படம் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.அந்த புகைப்படத்தில், கரீனா மிகவும் எளிமையான உடையிலும் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைலிலும் காட்சியளித்துள்ளார். அந்த புகைப்படம் அவரது ஃபிட்னஸ் மீது உள்ள பற்றை காட்டும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் இந்த போட்டோஸைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸில் ஹார்டின்களை குவித்து வருகின்றனர்.