பொழுதுபோக்கு
அவர் நடிச்சாரு, நான் பக்கத்தில் நாய் பாத்துட்டு இருந்தேன்: கருடன் படத்தில் நடித்த சீரியல் நடிகை ஓபன் டாக்!

அவர் நடிச்சாரு, நான் பக்கத்தில் நாய் பாத்துட்டு இருந்தேன்: கருடன் படத்தில் நடித்த சீரியல் நடிகை ஓபன் டாக்!
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிய முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்கத்தில் ரோஷ்னி, அருண், பரீனா, வினுஷா, கண்மணி மனோகரன், ரூபா ஸ்ரீ என பலர் நடித்த இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. கதையின் விறுவிறுப்பால் இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஆனால், இடையில் கதை சொதப்ப ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதை நிறுத்தினர். ஒருவழியாக சில நடிகர்கள் மாற்றத்துடன் 1036 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது. ஒரு காலத்தில் டி.ஆர்.பி-யில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து வந்த, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமாகினார் ரோஷ்னி ஹரிப்பிரியன். அவர் கண்ணம்மா கேரக்டரில் நடித்திருந்தார். நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் நடித்த ஒரே சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். இந்த சீரியலிலும் முழுமையாக நடிக்காத இவர், பாதியில் சீரியலில் இருந்து விலகினார். அதன்பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. பாரதி கண்ணம்மா சீரியிலில் நடித்தபோது, கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு, இவர், வீட்டை விட்டு வெளியேறி நடந்து செல்லும் காட்சி, பெரும் வைரலாக பரவியது. நெட்டிசன்கள் பலரும் இவர் நடந்து செல்லும் போட்டோவை வைத்து மீம்ஸ்கள் க்ரியேட் செய்து வைரலாகினார். A post shared by Blacksheep Cinemas (@blacksheepcinemas)பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பின் ரோஷ்னி ஹரிப்பிரியன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சூரி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த கருடன் படத்தில், வில்லன் உன்னி முகுந்தனின் மனைவி கேரக்டரில் ரோஷ்னி ஹரிப்பிரியன் நடித்திருந்தார். தொடர்ந்து, இவர் மெட்ராஸ் மேட்னி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்நிலையில், மெட்ராஸ் மேட்னி படத்தில் தான் நடித்தது குறித்து நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பிளாக்ஷீப் சினிமாஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்த சீசனில் இவர் தான் நடித்துக் கொண்டிருந்தார். நான் அவருக்கு பக்கத்தில் எமோஷ்னலாக நின்று கொண்டிருந்தேன். அப்போது அருகில் ஒரு நாய் இருந்தது. அது சிப்பிப்பாறை நாய் மாதிரி இருந்தது. அதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவிழ்த்து விட்டுராதீர்கள் என்பது போல் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் அந்த நாயை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.” என்று அவர் கூறியுள்ளார்.