உலகம்
இந்தியா மீதான வரியை 25% உயர்த்திய அமெரிக்க ஜனாதிபதி
இந்தியா மீதான வரியை 25% உயர்த்திய அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார்.
அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை