இலங்கை
இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!!

இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட 2 அப்படை உரிமைகள் மனுக்கள் உயர்நீதிமன்றத்தால் நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டன.
உயர்நீதிமன்ற நீதியரசர் அச்சலா வெங்கப்புலி மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு, விண்ணப்பங்களைத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, வெற்றிகரமான டிஜிற்றல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான பல்துறை மானிய உதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பரிமாறப்பட்டன.
மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் மனோகர டி சில்வா மற்றும் மூத்த வழக்கறிஞர் கனிஷ்கா விதாரண ஆகியோர் முன்னிலையானார்கள். சட்டமா அதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஷ்வரன் முன்னிலையானார்.