இலங்கை
இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் வகுப்புகளுக்குத் தடை

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் வகுப்புகளுக்குத் தடை
எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
விதிகளை மீறுவோர் மீது இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை அறைகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.