இலங்கை
இலங்கையின் வங்கியொன்றின் மீது அபாராதம் விதித்த மத்திய வங்கி

இலங்கையின் வங்கியொன்றின் மீது அபாராதம் விதித்த மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மூன்று நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 6.5 மில்லியன் அபராதங்களை வசூலித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, தேசிய சேமிப்பு வங்கி, கெசினோ நிறுவனங்களான பெலிஸ் லிமிடெட் மற்றும் பெல்லாஜியோ லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் மீது அபராதங்கள் விதிக்கப்பட்டன.
நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடும் சட்டம் அத்துடன் அதன் கீழ் வழங்கப்பட்ட விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் பணிப்புரைகள் என்பவற்றை கடைப்பிடிக்க தவறியமைக்காக குறித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அபராதமாக சேகரிக்கப்பட்ட பணம் தொகை திரட்டு நிதியத்துக்கு வரவு வைக்கப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.