இலங்கை
இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை!

இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை!
அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டு வரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
அதன்போது இலங்கையில் அறுகம்பே, வெலிகம மற்றும் உனவட்டுன போன்ற பகுதிகளில் அதிகரித்துவரும் இஸ்ரேலியப்பிரஜைகளின் ஆதிக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேபோன்று வாராந்தம் ஒருமுறை இஸ்ரேலியர்கள் கூடும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் சுற்றுலாப்பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதனாலேயே தவிர, வேறெந்த விசேட பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும்
மேற்குறிப்பிட்டவாறு சுற்றுலாப்பயணிகளாக நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உரிய அனுமதிபெறாமல், சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டுவரும் வணிகங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.[ஒ]