சினிமா
எது கொடுத்தாலும் வாயை மூடிக்கிட்டு வாங்கணுமா!! தேசிய விருதை விமர்சித்த நடிகை ஊர்வசி

எது கொடுத்தாலும் வாயை மூடிக்கிட்டு வாங்கணுமா!! தேசிய விருதை விமர்சித்த நடிகை ஊர்வசி
2023-ல் சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த நடிகைக்கான விருதினை தென்னிந்திய நடிகை ஊர்வசிக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நடிகர்கள் மீது கடும் விமர்சனமும் எழுந்தது.திறமையான பல நடிகர்களுக்கும் திரைப்படங்களுக்கும் தேசிய விருது வழங்கப்படவில்லை என்று பலரும் கொந்தளித்த நிலையில், மலையாள நடிகர் பிரிதிவிராஜ் சுகுமாரன் நடித்த ஆடுஜீவிதம் தி கோட் லைஃப் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டு, ஏமாற்றை கொடுத்தனர் என்றும் கொந்தளித்து விமர்சித்தனர்.இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய நடிகை ஊர்வசி, எப்படி ஆடுஜீவிதம் படத்தை புறக்கணிக்க முடிந்தது என்று தெரியவில்லை. நஜீபின் வாழ்க்கையையும் அவரது துயரங்களையும் வெளிப்படுத்த உடல் ரீதியாகவும் உழைப்பு ரீதியாகவும் பெரும் உழைப்பை கொட்டி இருந்தார் பிரிதிவிராஜ், ஆனால் அவருக்கு கொடுக்கவில்லை. எம்புரான் படம் தான் இந்த புறக்கணிப்புக்கு காரணம் என்று அனைவருக்கும் தெரியும். விருதுகள் அரசியலாக மாறக்கூடாது.2005ல் ‘அச்சுவிண்டே அம்மா’ படத்துக்கு எனக்கு சிறந்த நடிகை விருது வ்ழாங்கப்பட்டபோது நான் எதிராக குரல் எழுப்பவில்லை. காரணம் பரிசானியா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சரிதாவுக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையில் போராடி வந்த சரிதாவுக்கு கிடைத்ததால் நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது எனக்காக மட்டுமில்லை, சக நடிகர்களுக்காகவும் பேசவேண்டும்.தென் தமிழகத்தில் பல திறமையான நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்றா அந்த அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும். தேசிய விருது திறமைக்கானது மட்டுமே, வேறு எதனின் அடைப்படையிலும் கொடுக்கக்கூடாது, எதை கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக்கொள்ள வேண்டும் என அவர்களும் நினைக்கக்கூடாது. என்னை பொறுத்தவரை எந்த பயமும் இல்லை, இந்த கேள்வியை எனக்காக இல்லை, எனக்கு பின் வருபவர்களுக்காக கேட்கிறேன் என்று ஊர்வசி தெரிவித்துள்ளார்.