பொழுதுபோக்கு
என்னோட 2 பட கதை தான் தனுஷ் நடித்த இந்த படம்; உண்மை உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்: அல்டிமேட் காமெடி மூவி!

என்னோட 2 பட கதை தான் தனுஷ் நடித்த இந்த படம்; உண்மை உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்: அல்டிமேட் காமெடி மூவி!
கே.எஸ். ரவிக்குமார் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். அவர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஏராளமான வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை இயக்கியதற்காக அறியப்படுகிறார். அவர் படப்பிடிப்பு தளத்தில் தனது நுணுக்கமான திட்டமிடல் மற்றும் திறமைக்கு பெயர் பெற்றவர். அவர் ஒரு படத்திற்கு ஒருபோதும் அதிகமாக செலவு செய்ததில்லை, ஒரு படத்தை அதன் அட்டவணைக்கு அப்பால் தாமதப்படுத்தியதில்லை. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்சார கண்ணா. இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்தும் கூட பெரியளவில் பேசப்பட்டது, அதற்கு முக்கிய காரணமே கொரியன் திரைப்படமான பாரசைட் தான். அப்படம் ஆஸ்கார் விருதை வென்ற போது பலரும் இப்படத்தை பார்க்க தொடங்கினர்.அப்படி பார்த்த நமது தமிழ் பார்வையாளர்கள் பலரும் விஜய்யின் மின்சார கண்ணா படத்துடன் பாரசைட் படத்தை ஒப்பிட்டு பேசிவந்தனர், மேலும் இந்த இரண்டு படங்களிலும் ஒரே குடும்பம் ஒரு வீட்டில் சென்று வெவ்வேறு வேலைகளை பார்ப்பதை தான் ஒப்பிட்டு வந்தனர். இதனிடையே இப்படம் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார். அதில் விஜய் நடித்த முழு நில முதல் காமெடி படம் மின்சார கண்ணா தான் என கூறியுள்ளார்.மேலும் அவர் எடுத்த எதிரி திரைப்படம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட திரைப்படம் தான். இதில் மாதவன், சதா, கன்னிகா, விவேக், டெல்லி கனேஷ் என்று பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் மாதவன் ஒரு கல்யாண பெண்ணை கடத்த செல்லும் காட்சியில் தவறான பெண்ணை கடத்திவிடுவார். எதிரி மற்றும் மின்சார கண்ணா படத்தை தான் தனுஷின் உத்தம புத்திரன் படமாக எடுத்துள்ளார்கள் எனவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.அந்த இரண்டு படத்தை வைத்து தான் தெலுங்கு படம் ஒன்றை எடுத்தார்கள் என்றும், அதை ரீமேக் செய்து தமிழில் உத்தம புத்திரன் என எடுத்துள்ளார்கள் என்றும் கலகலப்பாக தெரிவித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.