சினிமா
என் எமனே அவன் தான்..மேடையில் பிரபல நடிகரை திட்டிய ராதா ரவி..

என் எமனே அவன் தான்..மேடையில் பிரபல நடிகரை திட்டிய ராதா ரவி..
பன்முக நடிகரான ராதா ரவி, வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரது மனதையும் ஈர்த்து வருகிறார். டப்பிங் யூனியனில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் ராதாரவி, கலா மாஸ்டருக்காக நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்டு முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.அதில், நீ தான் எமன், நான் சின்னமுத்து என்ற படத்தை ரிலீஸ் செய்தபோது பிரசாந்த், அவருடைய படத்தை ரிலீஸ் பண்ணி, என் படத்தை காணாமல் போக வைத்துவிட்டான். ஒரு வாரத்திலேயே அந்த படத்தை வெளியே தூக்கிவிட்டார்கள் என்று கூறியது பிரசாந்த் சிரித்துள்ளார்.மேலும் கலா மாஸ்டர் ஆரம்பத்தில் ரொம்ப ஒல்லியாக இருப்பார், தமிழ் சினிமாவில் அத்தனை நடிகர்களையும் ஆட வைத்திருக்கிறார். இன்னைக்கு இந்த நிலைமைக்கு இருக்கிறார்கள் என்றால் அவங்க எவ்வளவும் எதிர்ப்பையும் எவ்வளவு பிரச்சனையையும் தாண்டி வந்திருப்பார்கள்.ஒருமுறை, என்னிடம் பேசும்போது வாழ்க்கையில் நான் அனுபவித்த கஷ்டங்கள் யாரும் அனுபவித்திருக்க முடியாது என்று சொன்னார்கள். அந்தளவிற்கு கலா மாஸ்டர் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். நான் கூட அவருடைய கணவரிடம், நீங்க வீட்ல கணவரா? இல்லை மனைவியாக இருக்கீங்களா என்று கிண்டல் செய்வேன். காரணம் அவ்வளவு ஆளுமையோடு இருப்பார் கலா மாஸ்டர் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.