சினிமா
கோபப்பட்ட விஜய்யால் கடுப்பாகி ஏ ஆர் ரஹ்மான்!! உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..

கோபப்பட்ட விஜய்யால் கடுப்பாகி ஏ ஆர் ரஹ்மான்!! உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..
உலகளவில் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் ஏ ஆர் ரஹ்மான், இந்தியில் பிரமாண்டமுறையில் உருவாகி வரும் ராமாயணா படத்துக்கு பேட்மேன் பட இசையமைப்பாளர் ஜான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் குறித்து பலர் பலவிதமான கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.அந்தவகையில், அழகிய தமிழ் மகன் பட தயாரிப்பாளர் ஸ்வர்கஜித்ரா அப்பசன் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரஹ்மான் குறித்து ஒருசில விஷயத்தை பகிர்ந்துள்ளார்.அதில், அழகிய தமிழ் மகன் படத்திற்கு இசையமைத்தபோது இயக்குநர் பரதனிடமோ, விஜய்யிடமோ ஏ ஆர் ரஹ்மான் நேரடியாக பேசவில்லை. என்னிடம் மட்டுமே பேசி அப்படத்திற்கு இசையமைத்தார்.படத்தின் ஓபனிங் பாடல் நெடியானதும் விஜய் வீட்டுக்கு சென்று அந்த பாடலை போட்டு காட்டினேன். அப்பாடல் ஸ்லோவான பாடல் என்பதால் விஜய்க்கு பிடிக்கவில்லை. அவர் முகமே வாடிவிட்டது.மேலும் டாப்பாங்குத்து ஸ்டைலில் பாடல் இருக்க வேண்டும் என்று விஜய் கூறினார். அதற்கு நானோ சரி வேறு ஒரு பாடலை போட சொல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் விஜய், வேறொரு பாடலை ஏ ஆர் ரஹ்மான் போட்டுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை.நான் பேசிப்பார்க்கிறேன் என்று கூறியும் ஒரு காஃபிகூட கொடுக்காமல் விஜய் கோபமாக கிளம்பிவிட்டார். நான் நேராக ரஹ்மானிடம் சென்று ஹீரோவுக்கு பாடல் பிடிக்கவில்லை என்று கூறியதும் அவருக்கு மட்டும் பிடிக்கவில்லை, உங்களுக்கும் பிடிக்கவில்லையா? என்றார்.அதற்கு நான் டப்பாங்குத்து ஜானரில் வேண்டும் என்றது டென்ஷனாகிவிட்டார் ரஹ்மான். உடனே வாலிக்கு கால் செய்து நடந்ததை சொல்லி, நீங்கள் ஒரு பாடல் எழுதுங்கள் நான் அதற்கு இசைமைக்கிறேன் என்று கூறினார்.அந்தசமயத்தில் ஒரு பாடல் எழுத ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டிருந்தார் வாலி. நான் அவரை நேரில் சந்தித்து, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன், அவர் எல்லா புகழும் பாடலி எழுதி கொடுத்தார். பாடலை கேட்ட விஜய் கண்கள் கலங்கிவிட்டார் என்று தயாரிப்பாளர் ஸ்வர்கஜித்ரா அப்பசன் தெரிவித்துள்ளார்.