பொழுதுபோக்கு
சிம்ரன், ஜோதிகா ஓகே, பிடிக்காத ஹீரோயின் லைலா தான்; காரணம் சொன்ன நடிகர் ஷாம்!

சிம்ரன், ஜோதிகா ஓகே, பிடிக்காத ஹீரோயின் லைலா தான்; காரணம் சொன்ன நடிகர் ஷாம்!
லைலா தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த போது ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். அஜித் சரத்குமார் விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்த லைலா சிரிப்பின் அழகி என்றே சொல்லலாம். எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் உரையாடுபவர். கள்ளம் கபடம் இல்லாத அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகையாக மாறினார். சினிமாவில் ஒரு முன்னணி அந்தஸ்தை பெற்ற நடிகையாக மாறிய லைலா திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதன் பிறகு இப்பொழுது தான் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த வதந்தி வெப் சீரிஸ் மிகப்பெரிய அளவு அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.சமீபத்தில் கூட விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் கூட பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் சினிமாவில் ஹீரோயினாக புகழ் பெற்ற போது பிரசாந்த் லைலா இவர்கள் ஜோடியை தான் அனைவரும் விரும்பினார்கள். பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் கோட் திரைப்படத்தின் மூலம் தான் சேர்ந்திருக்கிறார் லைலா.இந்த நிலையில் நடிகை லைலாவை பற்றி பிரபல நடிகர் ஷ்யாம் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். லைலாவும் ஷாமும் இணைந்து உள்ளம் கேட்குதே என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்போது இருவருமே ஒரு வளரும் கலைஞர்களாக இருந்தனர்.அந்த படத்தில் லைலா ஒரு துரு துருவன கேரக்டரில் நடித்திருப்பார். இதைப்பற்றி ஷியாம் கூறும் போது எனக்கு பிடிக்காத நடிகை லைலா என்று சொல்லலாம் அந்த படத்தில் நடிக்கும் போது என்று நகைச்சுவையாக அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் நடிகை அசின் மற்றும் நடிகை பூஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். “ஏனெனில் அந்தப் படத்தில் ஒரு மாதிரி இரிடேட்டிங் பண்ணுகிற கேரக்டரில் லைலா நடித்திருப்பார். அதனால் படம் முழுக்க அப்படியே தான் வருவார். அப்போது பார்க்கும்போது எல்லாம் ‘ஐயோ’ அப்படின்னு தோன்றும். ஒரு கட்டத்தில் இனிமேல் லைலாவுடன் நடிக்கவே கூடாது என தோன்றியது. ஆனால் உண்மையிலேயே மிகவும் ஜாலியான கேரக்டர் லைலா” எனக் கூறியிருக்கிறார்.அந்த திரைப்படத்திற்கு பிறகு ஷ்யாம் லைலா ஜோடியும் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஒரு ஜோடியாக மாறியது