பொழுதுபோக்கு
சிவாஜி வச்சி படம் பண்றீங்களா? அய்யயோ சின்னவர் கோவப்படுவாரே; மிரட்டியவர்களுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக்!

சிவாஜி வச்சி படம் பண்றீங்களா? அய்யயோ சின்னவர் கோவப்படுவாரே; மிரட்டியவர்களுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக்!
தாங்கள் வாழ்ந்த காலம் வரை எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் நட்புடனும் அண்ணன் தம்பி என்கிற சகோதத்துவத்துடன் இருந்திருந்தாலும், வெளியில் இருந்தவர்கள் இவர்களுக்கு இடையில் மோதல் இருக்கிறது என்று சொல்லி வந்தார்கள். அந்த வகையில் சிக்கலை நடிகர் பாக்யராஜூவும் சந்தித்துள்ளார்.பாராதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ், புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், இன்றுபோய் நாளை வா, ஒரு கை ஓசை, தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட பல படங்களை இயக்கி ஹீரோவாக நடித்து வெற்றி கண்டார். குறிப்பாக பெண் ரசிகைகளுக்கு பிடித்தமான நாயகனாக வலம் வந்த பாக்யராஜ் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக இடம் பிடித்தார். அதேபோல், எம்.ஜி.ஆர், நடித்து பாதியில் நின்றுபோன, அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தை கையில் எடுத்துக்கொண்டு தனியாக திரைக்கதை அமைத்து, அவசர போலீஸ் 100 என்ற பெயரில் வெளியிட்டு வெற்றி கண்டார். இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் பாக்யராஜ் இடையே நெருக்கமான உறவு இருந்தபோது, எனது கலையுலக வாரிசு பாக்யராஜ் தான் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார். பாக்யராஜூவுக்கு திருமணம் செய்து வைத்தவர் எம்.ஜி.ஆர் தான்.எம்.ஜி.ஆர் – பாக்யராஜ் இடையே தந்தை மகன் அளவுக்கு பாசம் மரியாதை இருந்தபோதும், சிவாஜியை தன் படத்தில் நடிக்க வைத்தபோது அருகில் இருந்த பலரும் எம்.ஜி.ஆர் குறித்து பாக்யாஜூவிடம் தவறான கருத்தை தெரிவித்துள்ளனர். 1984-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்த படம் தான் தாவணி கனவுகள். 5 தங்கைகளுக்கு அண்ணனாக பிறந்த ஒருவனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் பாக்யாராஜ் குடும்பத்தின் நலவிரும்பி, முன்னாள் ராணுவ வீர்ர் கேப்டன் சிதம்பரம் கேரக்டரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். படத்தில் அவரது கேரக்டர் ஒரு வித்தியாசமான அதே சமயம் கவனம் ஈர்க்கும் வகையிலும் வடிவடைக்கப்பட்டிருந்த்து. இந்த படத்தில், சிவாஜி நடிக்கிறார் என்று தெரிந்தவுடன், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான சிலர், சிவாஜி வச்சி படம் பண்றீங்களா, போச்சி உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வர போகுது. இனிமேல் உங்களுக்கும் அவருக்கமான உளவு அவ்வளவுதான்.நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவர் வேறமாதிரி நடிப்பார். இதுல என்ன இருக்கு. நான் அறிவிப்பு வெளியிட்டேன். அதன்பிறகு ஒன்றும் ஆகவில்லை. படம் வேலை இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது நான் அவரிடம் போனேன். அவர் எல்லாம் முடிஞ்சிடுச்சா என்று கேட்டார், படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக சொன்னார், சிவாஜி என் படத்தில் எப்படி நடிக்கிறார் என்பதை பார்க்க அவர் ஆர்வமாக இருந்துள்ளார். பாக்யராஜ் இயக்கத்தில் சிவாஜி நடித்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்க அவருக்கு ஆசை என்பது எனக்கு தெரிந்த என பாக்யராஜ் கூறியுள்ளார்.