இலங்கை
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தின் ஸ்கான் முடிவுகள் என்ன; 3 வாரங்களில் அறிக்கை!

செம்மணி சித்துப்பாத்தி மயானத்தின் ஸ்கான் முடிவுகள் என்ன; 3 வாரங்களில் அறிக்கை!
சட்டத்தரணி ரணித்தா தெரிவிப்பு
அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்கான் பரிசோதனைகள் தொடர்பான இறுதி அறிக்கை, எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
சித்துப்பாத்தி இந்துமயானத்தில் மேலதிகமாக புதைகுழிகள் இருக்கின்றனவா என்று அறிவதற்காக தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் (ஜி.பி. ஆர்.) ஸ்கான் செய்யும் நடவடிக்கைகள் நேற்றும், நேற்றுமுன்தினமும் இடம்பெற்றன.
இந்தப் பணிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையிலேயே, அது தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.