இலங்கை
செம்மணி மனித புதைகுழி; பிரித்தானிய எம். பி உமா குமரன் கோரிக்கை

செம்மணி மனித புதைகுழி; பிரித்தானிய எம். பி உமா குமரன் கோரிக்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத் தமிழருமான உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இது தொடர்பில் உமா குமரன் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும்பேரழிவு என அவர் கூறியுள்ளார்.
அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு பிரிட்டன் மனித புதைகுழிதொடர்பான விசாரணைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குமா என கேள்வியெழுப்பியிருந்தேன் என குறிப்பிட்டுள்ள உமா குமரன் ,
இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்தும் தமது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும் எனவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் கூறியுள்ளார்.