இலங்கை
சோமரத்னவின் கடிதம் தமிழருக்குத் துரும்புச்சீட்டு; அருட்தந்தை மா.சக்திவேல் சுட்டிக்காட்டு!

சோமரத்னவின் கடிதம் தமிழருக்குத் துரும்புச்சீட்டு; அருட்தந்தை மா.சக்திவேல் சுட்டிக்காட்டு!
சோமரத்ன ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை தமிழ் அரசியற் தலைமைகள் சர்வதேச விசாரணைக்கான துரும்புச்சீட்டாகப் பயன்படுத்த வேண்டும் என்று சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியற் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- செம்மணி மனிதப் புதைகுழியில் எடுக்கப்படும் மனித என்பு எச்சங்கள், படுகொலை செய்யப்பட்டோரின் அவலக்குரல் மக்களின் இதயங்களைத் தட்டிக் கொண்டிருக்கின்றது.
கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் சோமரத்ன, 400க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டமைக்குச் சாட்சியாக இன்றும் உள்ளார்.
தனக்கு நீதி கிடைக்கவில்லை, தண்டிக்கப்படவேண்டிய உயர் அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை. இலங்கையின் நீதி விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையில் சாட்சியம சோமரத்ன ராஜபக்ச தனதுமனைவிளிக்கத் தயாராக உள்ளேன் என்று ஊடாகக்கூறியுள்ளமை, சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கும் தமிழர்களின் குரலுக்கு வலுச்சேர்ப்பதாகவே உள்ளது. சோமரத்ன ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை தமிழ் அரசியற்தலைமைகள் சர்வதேச விசாரணைக்கான துரும்புச்சீட்டாகப் பயன்படுத்த வேண்டும்- என்றுள்ளது.