Connect with us

இந்தியா

தமிழக எம்.பி-யின் செயின் பறிப்பு: குற்றவாளியை வளைத்த டெல்லி போலீஸ்

Published

on

Delhi mayiladuthurai Congress MP Sudha chain snatching

Loading

தமிழக எம்.பி-யின் செயின் பறிப்பு: குற்றவாளியை வளைத்த டெல்லி போலீஸ்

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் சுதா ராமகிருஷ்ணன், கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) காலை தனது சக எம்பி ராஜத்தி சல்மாவுடன் டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதா ராமகிருஷ்ணனின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்.இந்த அதிர்ச்சி சம்பவம், தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. தமிழ்நாடு இல்லம் அருகே உள்ள போலந்து தூதரகம் முன் சென்றபோது எதிரே ஒரு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு நபர், சுதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு சாவகாசமாக அங்கிருந்து சென்றார். இந்த நேரத்தில் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.பின்னர் சக எம்.பி.க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சூழலில், செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்றபோது என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது.உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்மநபரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற 4.5 சவரன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லி போலீசாரின் தங்களது எக்ஸ் வலைதளத்தில், “நாடாளுமன்ற உறுப்பினரின் சங்கிலியைப் பறித்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு செயின் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.க.சண்முகவடிவேல்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன