இலங்கை
தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது – மஹிந்த!

தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது – மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதாகக் கூறுகிறார்.
கொழும்பில் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகைகளை விட பெரியது எங்களிடம் எதுவும் இல்லை. அது எங்களிடம் இருக்கும் வரை, எந்த சலுகையையும் நீக்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.” எனக் கூறியுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை