இலங்கை
துப்பாக்கி களவாடிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

துப்பாக்கி களவாடிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
கொழும்பு – கொம்பனிதெரு பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொம்பனிதெரு காவல் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் களவாடி, வேறொருவருக்குக் கொடுத்த குற்றச்சாட்டில முன்னதாக சார்ஜன்ட் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.