இலங்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!
தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச். எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார் .
பாதாளக்குழுக்களைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கட்டுப்படுத்தி வருகின்றது. இராணுவ ஒத்துழைப்பு தேவைப்படும் பட்சத்தில் சட்ட நியதிகளுக்கு உட்பட்ட வகையில் அதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும். எனவே, தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதாளக் குழுக்களுக்கு அரசியல் பாதுகாப்பு தற்போது இல்லாமற்போயுள்ளது. இதனால் அக்குழுக்கள் குழப்பமடைந்துள்ளன. பாதாளக்குழுக்கள் ஒடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.