சினிமா
பாக்கியலட்சுமி சீரியலை முடிக்க இதுதான் காரணமா..? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்..

பாக்கியலட்சுமி சீரியலை முடிக்க இதுதான் காரணமா..? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்..
பொதுவாக ஒரு குடும்பத் தொடர் என்பது சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் முடிவடைவது வழக்கம். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த, குடும்பத்தை மையமாகக் கொண்டு நகர்ந்த “பாக்கியலட்சுமி” சீரியல், தமிழில் வெற்றிகரமாக ஓடிய மிகச் சிறந்த தொடராக திகழ்கிறது. இப்போது, அந்த தொடரின் இறுதி கட்டம் வந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாரத்துடனேயே பாக்கியலட்சுமி சீரியல் தனது பயணத்தை முடிக்கவுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாக்கியலட்சுமி என்பது ஒரு சாதாரண பெண்ணின் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்ட சீரியல். இந்த தொடரில், பாக்கியலட்சுமியின் வாழ்க்கை, அவளின் குடும்ப உறவுகள், தன்னை சுயமாக நிரூபிக்கும் போராட்டம் என அனைத்தையும் உணர்வுபூர்வமாக பதிவு செய்தனர்.பாக்கியலட்சுமி சீரியல் தொடக்கத்தில் மிகுந்த டிஆர்பி (TRP) பெற்றது. 2021, 2022 ஆண்டுகளில் தமிழ் சீரியல்கள் பட்டியலில் முதலிடங்களிலேயே இருந்தது. ரசிகர்களின் ஆதரவு என்பன இத்தொடரின் வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தன.ஆனால், கடந்த வார டிஆர்பி ரேட்டிங்களில் பாக்கியலட்சுமி முதல் 10 இடங்களில் கூட இடம்பெறவில்லை என்பது பெரிய அதிர்ச்சியாகும். இது, விஜய் டிவி நிர்வாகம் இந்த தொடரை முடிக்க முடிவு செய்ததற்கான முக்கிய காரணமாகவே பார்க்கப்படுகிறது.